சோகம்... வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து செத்துவிழும் காக்கைகள்!

 

 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் சமீபகாலமாகக் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், காலை முதல் மாலை வரை வீசும் வெப்ப அலை காரணமாகப் பறவைகள் மற்றும் விலங்குகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வற்றிக்கொண்டே வருவதால் பல்வேறு உயிரினங்கள் தாகத்தால் தண்ணீர் தேடி அலைவதைக் காண முடிகிறது.

இந்நிலையில், பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகக் காக்கைகள் ஆங்காங்கே அதிகளவில் சுருண்டு விழுந்து இறந்துவரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிகக் கடுமையான  வெயில் மற்றும் குடிநீரின்றித் தவிக்கும் பறவைகள் இதுபோன்று உயிரிழந்து வருவது விலங்கு ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீர்நிலைகள் வண்டு போவதைத் தடுக்கவும், பறவைகளின் தாகத்தைத் தணிக்கவும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே பாத்திரங்களில் தண்ணீர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.