மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற உலகளாவிய அழகுப் போட்டியில், கியூபாவைச் சேர்ந்த ஜோனா உரங்கா 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026' பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/t-_aaUlB384?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/t-_aaUlB384/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த மதிப்புமிக்க சர்வதேசப் போட்டியில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட்டே ஜோனா உரங்கா மகுடம் சூடியுள்ளார்.

இப்போட்டியில் நமீபியாவைச் சேர்ந்த சாண்டல் போரன் முதல் ரன்னர் அப்பாகவும், பராகுவே நாட்டைச் சேர்ந்த கியுலியானா ஒகாரிஸ் இரண்டாம் ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா அல்மெஸ்டிகா 3-வது ரன்னர் அப் இடத்தைப் பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்த ஜோனா உரங்கா, தான் இந்தப் போட்டிக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகத் தயாராகி வந்ததாகவும், தான் கலந்துகொண்ட வகுப்புகளும் மேற்கொண்ட கடின உழைப்புக்கும் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தனது நீண்ட நாள் மிகப்பெரிய கனவு நனவாகியுள்ள தருணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.