க்யூட் வீடியோ... கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி!
விருதுநகரில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன டர்ஃப் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியரும் நேரடியாகக் களமிறங்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
விருதுநகரில் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன டர்ஃப் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மைதானத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். மைதானத்தைத் திறந்து வைத்த கையோடு, அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் நேரடியாகக் களத்தில் இறங்கினர்.
சிறிது நேரம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்து உற்சாகமாக விளையாடி விளையாட்டு வீரர்களை மகிழ்வித்தனர். இவர்களது கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.