"மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' எனப் பெயர் மாற்றுக" - சி.வி.சண்முகம் வேண்டுகோள்!

 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என்று மாற்றுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய GenZ தலைமுறையினருக்கு 'மெட்ராஸ்' என்ற பழைய பெயர் குறித்த தெளிவு பெரிய அளவில் இல்லாத காரணத்தினால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை மாற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பெயர் மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கும் வகையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரடியாகப் பிரதமரைச் சந்தித்துப் பேசி உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர் சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டார்.