'அக்வான்' புயல் எதிரொலி... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

வங்கக்கடலில் உருவாகி வரும் 'அக்வான்' புயல் சின்னம் காரணமாகத் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. புயலின் நகர்வு மற்றும் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

புயல் சின்னத்தின் தாக்கம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் திசை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சூழலுக்கு ஏற்பத் தொடர்புடைய மாவட்ட நிர்வாகங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அனைவரும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.