ஒடிசாவை நெருங்கிய அக்வான் புயல் கரையை கடக்கத் தொடங்கியது! 3 லட்சம் பேர் வெளியேற்றம்
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஒடிசாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த 18-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் எனப் பெயரிடப்பட்டது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியது.
கோபால்பூர் அருகே புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒடிசாவின் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2,500-க்கும் அதிகமான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 423 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.மேலும், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.