'அர்னாப்' புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.. நாளை ஆந்திரா - ஏனாம் இடையே கரையைக் கடக்கும் என எச்சரிக்கை!
Oct 27, 2026, 07:50 IST
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'அர்னாப்' புயல் மேலும் வலுவடைந்து மிக தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
'அர்னாப்' புயல் தற்போது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 360 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இப்புயல் மேலும் நகர்ந்து, ஆந்திரா - ஏனாம் கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே மிக தீவிரப் புயலாக நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.