மோந்தா புயல்... சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை!
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை கரையைக் கடக்கவுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோந்தா புயலின் விளைவாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலில், மோந்தா புயலால் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!