undefined

  ‘மோந்தா’ புயல் ... ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது! 

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த 26ஆம் தேதி புயலாக வலுப்பெற்று ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. முதலில் இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்தது.

நேற்று காலை அதிதீவிர புயலாக வலுவடைந்த ‘மோந்தா’ மாலை 6 மணியளவில் காக்கிநாடா அருகே கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ. வேகத்தில் சூரைக்காற்று வீசியது. கடும் காற்றுடன் மின்னல் மழை பெய்ததால் மசூலிப்பட்டினம், கிருஷ்ணா உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. முன்னெச்சரிக்கையாக காக்கிநாடா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கோனசீமா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலிருந்து இரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஆந்திராவில் கரையைக் கடந்த ‘மோந்தா’ புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து சாதாரண காற்றழுத்த தாழ்வாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் மீதமுள்ள தாக்கம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!