முரசு புயல்.. CM விஜய்யிடம் உதவி கேட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
முரசு புயல் ஆந்திர கடற்கரையை நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை ஆந்திர அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புயல் பாதிப்பால் மின்கம்பங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால், அவற்றைச் சீரமைக்கும் பணிகளுக்காக தமிழகத்தின் உதவியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜயிடம் அவர் உதவி கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்புமாறு சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு உதவுவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்ததாக சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து மூன்று பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முரசு புயல் காரணமாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.