சூறாவளிக் காற்று... மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!

 

தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 29 முதல் 31 ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.