undefined

  மெத்தபெட்டமின் போதைப்பொருள் கடத்திய  டான்ஸ் மாஸ்டர்... பெரும் பரபரப்பு!  

 

 

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சிபிராஜ் (22) என்ற இளைஞர், நடன கலைஞராக இருந்து ஈக்காட்டுதாங்கலில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் தன் நடன வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக இருந்த அவர், இன்ஸ்டாகிராமில் ஏராளமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் அருகே மணவாளநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த சிபிராஜை நிறுத்தி விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து 55 கிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருள், 4 லைட்டர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருளை திருவள்ளூரில் விற்பனை செய்ய வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் பகுதியில் போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் போதை பழக்கத்தில் சிக்கி வருவதாகவும், இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!