undefined

 ஜனவரி 29 வரை NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!  

 
 2024-25 ம் ஆண்டுக்கான  தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தன.  இந்த விண்ணப்பத்தில் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 29 வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று ஜனவரி 25ம் தேதி  கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’2024-25 ம் ஆண்டுக்கான   தேசிய வருவாய்  மற்றும் தகுதி  படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மற்றும் கட்டண தொகை செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என  அறிவிக்கப்பட்டது.


தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 29 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!