கொலை மிரட்டல்.. பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா ஜாமீனில் விடுதலை!

 

பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டார்டே, கடந்த 2024ஆம் ஆண்டு பேட்டியளிக்கையில் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும், தான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இந்தக் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், அவர் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனால் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் செனட் அவையில் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு வரும் அவருக்கு, இந்த வழக்கு மேலும் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.