நேபாள் பெருவெள்ளத்தால் பலி எண்ணிக்கை 1,388 ஆக உயர்வு - தொடரும் மீட்புப் பணிகள்!
Sep 5, 2026, 10:10 IST
நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் அந்நாடு கடுமையாக உருக்குலைந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,388 ஆக உயர்ந்துள்ளது. இதில் 480 ஆண்களும், 269 பெண்களும், 52 சிறுவர்களும், 33 சிறுமிகளும் அடங்குவர் என நேபாள அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 4,000-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரிடர் மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 7,592 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.