நேபாளப் பெருவெள்ளத்திற்கு மத்தியில் திபெத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,273 ஆக உயர்வு!
கடும் வெள்ளப் பாதிப்புகளால் நேபாளமும் திபெத்தும் தத்தளித்து வரும் சூழலில், திபெத்தில் பதிவாகியுள்ள நிலநடுக்கம் அப்பகுதியில் மேலும் பீதியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தில் இன்று நிலப்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 5 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சீனா-நேபாள எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், வெள்ளப் பாதிப்புகளினால் திபெத்தில் மட்டும் புதிதாக 21 பேர் பலியாகியுள்ளனர்.
திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட தொடர் பேரிடர்களால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை தற்போது 1,273 ஆக உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.