சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
சிக்கிம் மாநிலத்தில் டீஸ்டா நீர்மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீஸ்டா நதியின் குறுக்கே நீர்மின் உற்பத்திக்காகச் சுரங்கப்பாதை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தபோது, எதிர்பாராத விதமாக மேல் பகுதி இடிந்து விழுந்து கொடூர விபத்து ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்தபோது 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது. சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் மேலும் 5 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (SDRF) மீட்புக் கருவிகளுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.