வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.. எங்கு கரையைக் கடக்க வாய்ப்பு?!

 

மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதாகவும், இது அடுத்த சில மணி நேரங்களில் மேலும் வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி காலையில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.