தீபாவளி போனசாக   ஊழியர்களுக்கு ஐபோன் 16 பரிசு அளித்த  நிறுவனம்!  

 

 

தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்புகள், போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால், டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ஐபோன் 16 மொபைல் போன்களைப் பரிசாக வழங்கி கவனம் ஈர்த்துள்ளது.

allowfullscreen

நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் பங்களித்த ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஐபோன் வழங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அந்த நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

அந்தப் பதிவில், “எங்கள் நிறுவனத்தில் போட்டியாளர்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளதுடன், தீபாவளிக்கு மற்றவர்களுக்கு என்ன பரிசு கிடைத்தது என்றும் நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிறுவனத்தின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வழக்கமான தீபாவளிப் பரிசுகளுக்கு மத்தியில், ஐபோன் வழங்கிய இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.