டெல்லி நார்த் பிளாக்கில் திடீர் தீ விபத்து... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

 

டெல்லியில் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் செயல்படும் நார்த் பிளாக் கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள குளிர்சாதனக் கருவியின் கொதிகலன் பகுதியில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

allowfullscreen

கட்டிடத்தின் மொட்டை மாடியில் பழுதுபார்க்கும் பணிகளும் வெல்டிங் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் நார்த் பிளாக் கட்டிடத்தில் தீ ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.