சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் அடித்துக் கொலை - டெல்லியில் கொடூரம்!

 

டெல்லியில் சிகரெட் பற்ற வைக்கத் தீப்பெட்டி தர மறுத்தஇளைஞர் ஒருவரைக் கும்பல் தாக்கிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், மற்றொருவரிடம் சிகரெட் பற்ற வைப்பதற்காகத் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் தீப்பெட்டி தர மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நபர், அந்த இளைஞரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான குற்றவாளியைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்