சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் குத்திக்கொலை! டெல்லியில் அதிர்ச்சி!
டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனி (30). இவர் தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார்.
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆயிஷ் ராமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நரேஷ், தருன் உள்ளிட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்காக புவனியிடம் தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் புவனி தீப்பெட்டி கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர்கள் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராம் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.