பனியன், ட்ரவுசருடன் பெண்களிடம் மனுக்களை வாங்கிய எம்.எல்.ஏ... சர்ச்சை வீடியோ!

 

டெல்லியில் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் லட்சுமி யோஜனா உதவித்தொகை திட்டம் தொடர்பான படிவங்களில் கையெழுத்து பெறுவதற்காக பொதுமக்கள் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வத்ஸை சந்தித்தனர். அப்போது அவர் பனியன் மற்றும் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்து பொதுமக்களின் மனுக்களைப் பரிசீலித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதி ஒருவர் பொதுமக்களை சந்திக்கும் போது கண்ணியமான முறையில் உடை அணிந்து இருக்க வேண்டும் என்ற கடுமையான விவாதம் தற்போது எழுந்துள்ளது.

Meet Aam Aadmi Party's MLA : Anil Jha Vats!!

> MLA from Kirari Assembly

> Wears Kacha and Baniyan

> Sits outside his home

> Signs documents without even reading them

> Claims to be an MLA from Padhi-Likhi Political Party!! pic.twitter.com/xYozn5liVH

— Rohit (@Iam_Rohit_G) August 10, 2026

இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து விமர்சித்துள்ளார். பொதுமக்களை சந்திக்கும் முறையிலும் சட்டமன்ற நடவடிக்கைகளின் போதும் அந்த சட்டமன்ற உறுப்பினர் தவறான நடத்தை கொண்டுள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வத்ஸ் முழுமையாகத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் ஆளும் அரசு திணறுவதாகவும், தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே தன்னை குறிவைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.