டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: சிறுநீரிலிருந்து வெடிகுண்டு தயாரித்த பயங்கரவாதி மற்றும் 11 பேர் பலியான பின்னணி!

 

 

 

 

டெல்லியில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த அதிிகாரப்பூர்வமான கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டைக்கு அருகில் சாலையில் நின்று கொண்டிருந்த 'ஹுண்டாய் ஐ-20' ரக கார் திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. அதன்பேரில், யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் டாக்டர் முகமது உமர் என்பவருடன் தொடர்பில் இருந்த அல் ஃபலா மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் 3 மருத்துவர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மனித சிறுநீரிலிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் அதிநவீன மற்றும் ஆபத்தான முறையைக் கையாண்டு இந்த நாசவேலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் பாதுகாப்புத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.