உஷார்... தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு! 

 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை பதிவான தரவுகளின்படி 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீவிர டெங்கு பாதிப்பு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகச் சென்னையில் 2,584 பேரும், கோவையில் 1,999 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், இந்த ஆண்டு தமிழகத்தில் 1,791 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டு 645 ஆக உயர்ந்துள்ளது.