காற்றழுத்த தாழ்வு பாதை... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய  7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.