undefined

சோகம்!! சதுரகிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு!! 

 


விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் 64000 ஏக்கர் பரப்பளவில் மலைமேல்   அமைந்துள்ளது சதுரகிரி மகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதத்தின் 8 நாட்கள் மட்டும் மலையேறி சாமி தரிசனம்  செய்ய அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை புரிந்தனர்.  அப்போது சிவகங்கை மாவட்டத்தில் இருந்து  சிவாஜியும் வந்திருந்தார். அவர் மலையேறும் போது   கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்னுமிடத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் .

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு சென்றவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்அதிர்ச்சியையும்,  பரபரப்பையும்  ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!