வைரல் வீடியோ... ரயில் இன்ஜினில் ஏறி கும்பமேளா செல்லும் பக்தர்கள் !
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராயக்ராஜில் மகா கும்ப மேளாவில் நீராட உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு வழிகளில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இதனால் ரயில் பயணத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.அந்த வகையில் வாரணாசி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அன்று பயணிகள் ரயில் இன்ஜினில் ஏறி பயணிக்க முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால், பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். ரயில்களின் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் ஏறி ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர். கூட்டத்தை நிர்வகிக்கவும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!