தனுஷ், ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிப்பு... 72-வது தேசிய விருதுகள் வெற்றியாளர்களின் முழு லிஸ்ட்!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், 2024-ஆம் ஆண்டு வெளியான சிறந்த இந்தியத் திரைப்படங்களை அங்கீகரிக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் வெற்றியாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபீச்சர் திரைப்படங்கள் (சிறப்புப் பாராட்டு)
தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், இந்த முறை இரண்டு முக்கியத் திரைப்படங்களுக்குச் சிறப்புப் பாராட்டுத் தகுதிகள் கிடைத்துள்ளன.
கேப்டன் மில்லர் (தமிழ்) – தனுஷ்: வரலாற்றுப் பின்னணியில் உருவான அதிரடித் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்குச் சிறப்புப் பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
மெய்யழகன் (தமிழ்): தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்த திரைப்படம் ஒலிப்பதிவிற்காகச் சிறப்புப் பாராட்டுத் தகுதியைப் பெற்றுள்ளது.
நான்-ஃபீச்சர் திரைப்படங்கள்
வணிக ரீதியற்ற மற்றும் குறும்படங்கள் பிரிவில் தங்களது அசாத்தியத் திறமையை நிரூபித்த கலைஞர்களுக்கான விருதுப் பட்டியல்:
சிறந்த நான்-ஃபீச்சர் திரைப்படம்: பங்கார் (Obsolete) – மராத்தி மற்றும் ஆங்கிலம்.
இயக்குநரின் சிறந்த அறிமுகத் திரைப்படம்: ரவி ராஜ் முர்மு.
சிறந்த வாழ்க்கை வரலாற்று/வரலாற்று ஆவணப் படம்: ககோரி – கமலேஷ் கே. மிஸ்ரா.
சிறந்த கலை மற்றும் பண்பாட்டுத் திரைப்படம்: மெயின் நிதா (ஹிந்தி) – அதுல் பாண்டே.
சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படம்: பிப்லாந்திரி: எ டேல் ஆஃப் ஈகோ ஃபெமினிசம் – சூரஜ் குமார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: டச்டு அஸ் வாட்டர் – ஜோஷி பெனடிக்ட்.
சிறந்த குறும்படம்: ஹம்சஃபர் (மராத்தி).
சிறந்த இயக்கம்: ஆனந்த் எல். ராய் (ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி: ஏக்தா கா பிரதிக் - ஹிந்தி).
சிறந்த ஒளிப்பதிவு: லைஃப் இன் லூம் – எட்மண்ட் ரான்சன்.
சிறந்த ஒலி வடிவமைப்பு: புளூ (தமிழ்) – டி.எஸ். ஹரிஹர சுதன்.
சிறந்த படத்தொகுப்பு (Editing): என்டிஏ (ஹிந்தி) – மன்வீர் ஜஸ்ரோட்டியா.
சிறந்த இசை இயக்கம்: பரத் 41°ச்யா மகாவர் (மராத்தி) – ஷிவ்பால் சிங் காங்.
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார்
சிறந்த குரல் வர்ணனையாளர் (Narrator): லிட்டில் பிளானட்: எ டேல் ஆஃப் ஃப்ராக்ஸ் (ஆங்கிலம்) – சௌந்தர்யா ஜெயச்சந்திரன்.
சிறந்த திரைக்கதை: ஒபூர் (மேகங்கள்) – ஹிந்தி மற்றும் காஷ்மீரி (ஃபராஸ் அலி).
சிறப்புப் பாராட்டு (நான்-ஃபீச்சர்): சோலா டோரா அவுர் சூய் (ஹிந்தி) – ஜெய்மின் மோடி மற்றும் லோகேஷ் காய்.
சிறப்புப் பாராட்டு (நடனம்/நாடகம்): பத்ரகாளி நாடகம் – ஆனந்த ஜோதி.
வட்டார மொழித் திரைப்படங்களுக்கான விருதுகள்
இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் 2024-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த வட்டார மொழித் திரைப்படங்களுக்கான விபரம்:
சிறந்த தமிழ் திரைப்படம்: ராயன் – தனுஷ்.
சிறந்த தெலுங்கு திரைப்படம்: கமிட்டி குர்ரோலு – யது வம்சி.
சிறந்த மலையாள திரைப்படம்: ஃபெமினிச்சி பாத்திமா – பாசில் முகமது.
சிறந்த மராத்தி திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி – பரேஷ் மொகாஷி.
சிறந்த மணிப்புரி திரைப்படம்: சுனிதா – யும்னம் அஜித் சிங்.
சிறந்த ஒடியா திரைப்படம்: லஹாரி – அமர்த்யா பட்டாச்சார்யா.
சிறந்த கர்வவாலி திரைப்படம்: தோலி – தினேஷ் பி. போன்ஸ்லே.
சிறந்த துளு திரைப்படம்: இம்பு (IMBU) – ஷிவத்வாஜ் ஸ்டுடியோ.
சினிமா எழுத்து மற்றும் இதர விருதுகள்
திரைப்படங்கள் மட்டுமின்றி, சினிமா குறித்த ஆழமான பார்வைகளை எழுத்து வடிவிலும் விமர்சன வடிவிலும் கொண்டு சேர்த்தவர்களுக்கான கௌரவம்:
சிறந்த திரைப்பட விமர்சகர்: சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா (ஹிந்தி சினிமா விமர்சன பங்களிப்பிற்காக).
சினிமா குறித்த சிறந்த புத்தகம்: 'நானிருவுதே நிமகாகி நாடிருவுதே நனகாகி: கன்னட சினிமாத தத்வா மத்து ராஜகீயா' – கெஞ்சனூரு பிரதீப் குமார் ஷெட்டி.