சிக்கன் பிரியாணி, முட்டை, பிரெட் அல்வா… தனுஷ் இயக்கக் கூட்டத்தில் தடபுடல் விருந்து!
Oct 26, 2026, 15:50 IST
சென்னையில் நடைபெற்ற நடிகர் தனுஷின் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பில், பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் அக்டோபர் 26-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி, முட்டை, பிரெட் அல்வா உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைவ உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விருந்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.