தனுஷின் மகளிர் அணி கூட்டத்தில் திடீர் திருப்பம் ... ஆதரவு தெரிவிக்க சகோதரிகள் வருகை - உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் மாநில அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தனுஷிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சகோதரிகளும் நேரில் வருகை தந்துள்ளனர்.
தனுஷ் தனது அகில இந்தியச் சமூக நல நற்பணி மன்றத்தின் மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் ஆலோசனை நடத்துவதற்காக இந்தச் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், தனுஷின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கவும் அவரது சகோதரிகள் விழாக் கூடத்திற்கு வருகை தந்தனர்.
தனுஷின் குடும்பத்தினரும் இந்நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்றுள்ளதால், கொட்டும் மழையிலும் அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகமும் ஆரவாரமும் ஏற்பட்டது.
ஏற்கனவே தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மகளிர் அணி நிர்வாகிகளை மட்டும் தனியாக அழைத்து நடத்தப்படும் இக்கூட்டத்தில் அவரது குடும்பத்தினரும் பங்கெடுத்துள்ளது, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மேலும் பலத்த எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நடிகர் தனுஷ் மேடையில் உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.