தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக பிரச்சாரத்திற்கு சென்றிருந்த நடிகர் ஜெய்க்கு உற்சாக வரவேற்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்த திரைப்பட நடிகர் ஜெய்க்கு, தவெக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கத் திரைப்பட நடிகர் ஜெய் வருகை தந்துள்ளார். தாராபுரத்திற்கு வருகை தந்த நடிகர் ஜெய்தைக் கண்டதும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள், "தளபதி விஜய்யை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்புடன் கூறி வழியனுப்பி வைத்தனர்.
நடிகர் ஜெய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் பொதுமக்களுடன் அவர் உரையாடிய காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.