தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளருக்கு மக்கள் எதிர்ப்பு.. 6 பேர் கைதான நிலையில் காவல் நிலையம் முற்றுகை!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்த சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்து பிரச்சாரப் பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். பொதுமக்கள் வேட்பாளருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளை வீடியோ பதிவு செய்த 6 பேரைப் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களைக் கைது செய்ததைக் கண்டித்துக் பொதுமக்கள், திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து குண்டடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் தொகுதி முழுவதும் கடுமையான மக்கள் எதிர்ப்பு நிலவி வருவதால், தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் பிரச்சாரப் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.