தாராபுரம் இடைத்தேர்தல் - முருங்கைக்காய் பறித்து, விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!

 

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் விஜய், இன்று அப்பகுதி முருங்கைக்காய் விவசாயிகளை நேரில் சந்தித்து, முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்து, அவர்களிடம் வாக்கு சேகரித்து ஆதரவு கோரினார்.

தாராபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய், முருங்கைக்காய் விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது விவசாயிகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு கோரியதைத் தொடர்ந்து, விஜய் அடுத்ததாக அப்பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணைக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களையும் உரிமையாளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பு மக்களை நேரடியாகச் சந்தித்து முதல்வர் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.