ஈரானுக்குப் பயந்து லாரியில் பதுங்கி, ராணுவ விமானத்தில் சென்றாரா டிரம்ப்? வெளியான அதிர்ச்சி உண்மை!
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அச்சுறுத்தல் காரணமாக லாரியில் பதுங்கி, ராணுவ விமானத்தில் பயணித்ததாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாடு பரிசாக வழங்கிய அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஜெட் விமானத்தில் டிரம்ப் துருக்கிக்குச் சென்றார்.
தலைநகர் அங்காராவில் இருந்து அமெரிக்கா திரும்பும்போது, அவர் பழைய 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் ஏறுவது போல ஊடகங்களுக்குக் காட்டப்பட்டது. பத்திரிகையாளர்களும் டிரம்ப் தங்களுடன் தான் பயணிக்கிறார் என நம்பினர். ஆனால், அவர் யாருக்கும் தெரியாமல் விமான நிலையத்தின் உணவு கொண்டு செல்லும் லாரியில் ஏறி ரகசியமாகச் சென்று, 'ஏர் போர்ஸ் C-32A' என்ற சிறிய ரக 3-வது ராணுவ விமானத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.
டிரம்ப் பயணித்த சிறிய ரக ராணுவ விமானம் இரவு 10.20 மணிக்கு இங்கிலாந்தை அடைந்தது. அதன் பின்னரே, பத்திரிகையாளர்கள் வந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானம் அங்கு வந்து சேர்ந்தது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவ் செங்கிடம் கேட்டபோது, "அமெரிக்காவிற்குப் பல எதிரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் டிரம்பைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவே அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறோம்" எனக் கூறினார்.
ஈரானுடன் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே டிரம்ப் ஒரே பயணத்தில் 3 விமானங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தியுள்ளார் என்பது கசிந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.