சாலமன் பாப்பையா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி கதறி அழுத திண்டுக்கல் லியோனி!
தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 11) காலமானார். அவரது மறைவு தமிழ் உலகிற்கும் பட்டிமன்ற மேடைகளுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த சாலமன் பாப்பையாவின் உடல் மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாலமன் பாப்பையாவின் நீண்டகால சகாவும் பிரபல பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிய அவர், "ஐயா லியோனி வந்திருக்கேன்யா... நான் வளர்த்த பிள்ளைனு சொல்லுவீங்களே..." எனக் கூறி கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது.
பட்டிமன்ற மேடைகள் மூலம் தமிழ் மொழியை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனத் திண்டுக்கல் லியோனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.