முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படம்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சுவாரஸ்யத் தகவல்!

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தால், அப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று பெயரிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாதியை அவரது திரைத்துறை வாழ்க்கையாகவும், அரசியலுக்கு வரும் முடிவை படத்தின் இடைவேளையாகவும், இரண்டாம் பாதியை அரசியல் பயணமாகவும் வடிவமைப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.