"சட்டமன்றத்தில் ‘மாண்புமிகு’ என சொல்லாமலே இருக்கலாம்" - இயக்குநர் சீனு ராமசாமி

 

சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், அரசியல் நாகரிகம் மற்றும் "மாண்புமிகு" என்ற சொல்லின் பயன்பாடு குறித்துத் பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

"சட்டமன்றத்தில் உரையாற்றும்போது 'மாண்புமிகு' என்று அழைத்துவிட்டு, அடுத்த கணமே தனிப்பட்ட முறையில் தாக்குதல்களிலும் கேலி அடைமொழிகளிலும் இறங்குவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல."

"சட்டமன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக உற்றுநோக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இது தவறான வழிகாட்டுதலாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துவிடும். ஒரு சொல்லுக்குரிய மாண்பையும் மரியாதையையும் காப்பாற்ற முடிவில்லை என்றால், 'மாண்புமிகு' என்ற அடைமொழியைப் பயன்படுத்தாமல் சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது."

அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.