சொத்து மதிப்பு வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு!
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பு விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், முதலமைச்சர் விஜய்க்குச் சட்டரீதியான சிக்கல்கள் எழக்கூடும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர ஆவணங்களில் சொத்து மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கில் விஜய்க்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் தனது முதலமைச்சர் பதவியை இழக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை அத்தகைய சூழல் உருவாகும் பட்சத்தில், புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜுனா புதிய முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் ஏற்படலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.