மனைவியுடன் தகராறு.. புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை!
Sep 1, 2026, 08:30 IST
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்த டிரைவர் கஜேந்திரன் (26), மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கஜேந்திரனுக்கு திருமணமாகி நான்கரை மாதங்களே ஆன நிலையில், அவரது தங்கைக்குத் திருமணம் நடைபெறவிருந்த சூழலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த அவர், வீட்டின் அறைக்குள் சென்று விபரீத முடிவெடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.