இந்துக்களின் புனித முழக்கங்களைத் திரித்துப் பேசுவதா? முதல்வர் விஜய், உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
இந்துக்களின் பாரம்பரிய வீர முழக்கங்களை அரசியல் நோக்கத்திற்காகத் திரித்துப் பேசுவதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'ஓம் சக்தி, பராசக்தி', 'ஓம் காளி, ஜெய் காளி' போன்ற இந்துக்களின் பாரம்பரிய வீர முழக்கங்களை எதுகை மோனையாக மாற்றித் திரித்துப் பேசுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தீர்ப்பதற்காகப் புனிதமான ஆன்மீக முழக்கங்களைப் பயன்படுத்துவது அப்பட்டமான இந்து மத அழித்தொழிப்பு வெறி என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இது பொதுமக்களிடையே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.