அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்... தமிழக அரசுக்கு கோரிக்கை!
கட்டுமான, அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7000 வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு எச்எம்எஸ் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை மாவட்ட நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் ஆர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார் அளித்த மனுவில் கூறியதாவது "கட்டுமான அமைப்புசாரா. ஆட்டோ தொழிலாளர்களின் கடினமான உழைப்பில் தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத் தன்மையோடு இருந்து வருகிறது.
இதில் கட்டுமான ஆட்டோ தொழிலாளர் நலன் காத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட நல வாரியங்களுக்கான வருவாய் அரசால் நிர்ணயித்துள்ள வரி மூலம் நேரடியாக பெற்று வருகிறது. அதேபோல அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காத்திட தேவைப்படும் நிதி ஆதாரத்தை தமிழக அரசே வழங்கி வந்தாலும் அது ஒரு வகையில் அமைப்புசாரா தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதின் மூலம் அரசின் வருவாய் கூடி அதன்மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைப்புசாரா, கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தேவையான சமூக நலத்திட்டங்களை தமிழக அரசே பொறுப்பேற்று நிறைவேற்றி வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கீழ்கண்ட கோரிக்கையும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுமான அமைப்புசாரா மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தரமான முதலாளியோ அல்லது நிரந்தரமான மாத ஊதியமோ இல்லாத நிலையிலும் இவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படாத காரணத்தினாலும், வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திடும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கின்ற காரணத்தினாலும், பாண்டிச்சேரி மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் தீபாவளி போனஸ் வழங்கிடுவதைப் போல தமிழகத்தில் உள்ள கட்டுமான அமைப்புசாரா மற்றும் ஆட்டோ நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆசு ரூ.7000/- வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!