அயோத்தியில் தீபாவளி தீபோத்சவம்... கின்னஸ் சாதனைக்காக 26 லட்சம் விளக்குகள் !
ராமர் பிறந்த தலம் அயோத்தியில், ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி தீபோத்சவம் இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் 20 வரை சரயு நதிக்கரையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் சுமார் 26 லட்சம் விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டிரோன்கள் பறக்கும் காட்சிகள், லேசர் விளக்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளன.
இந்த விழா, ராமனின் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்ததும், ராவணனை வதம் செய்து அயோத்திக்கு திரும்புவதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்; விளக்கேற்றும் தன்னார்வலர்கள், அடிப்படை வசதிகள், அகல் விளக்குகள், எண்ணெய், திரி, வத்திப்பட்டி ஆகியவை தயாராக உள்ளன.
சரயு நதிக் கரையை சுற்றி பல நுழைவுப்பாதைகள் அமைக்கப்பட்டு, சுமார் 100 கலைஞர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நிகழ்வை சாதனைகள் பல படைக்கும் வகையில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், விழாவை பார்வையிடும் ஒவ்வொருவருக்கும் அது வாழ்நாள் அனுபவமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!