தீபாவளி தினத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தீபாவளி நாளான நவம்பர் 8-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவும், வெளியிடங்களுக்குச் செல்லவும் திட்டமிடுபவர்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது அவசியம். குறிப்பாக மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை உள்ள மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்