தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள்... டிரைவர், நடத்துநர்களுக்கு அனைத்து விடுப்பு ரத்து!
Nov 4, 2026, 19:45 IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் சிரமமின்றிப் பயணம் செய்யத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று நவம்பர் 4ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகளை முழுமையாக இயக்க ஏதுவாக, நவம்பர் 4 முதல் 12 வரை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர மண்டல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.