தீபாவளி ஸ்பெஷல்.. இன்று ஒருமணி நேரம் மட்டும் பங்குச்சந்தை வர்த்தகம் - முகூர்த்த டிரேடிங் நேரம் என்ன?

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தைகளான தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றில் இன்று சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது.

இதன்படி, பிற்பகல் 2.05 மணி முதல் 2.20 மணி வரை முன்திறப்பு வர்த்தக அமர்வு நடைபெறும். தொடர்ந்து, பிற்பகல் 2.20 மணி முதல் 3.30 மணி வரை முக்கிய வர்த்தக அமர்வு நடைபெற உள்ளது. தீபாவளியன்று லட்சுமி பூஜையை முன்னிட்டு நடத்தப்படும் இந்தச் சிறப்பு வர்த்தகம், புதிய சம்வத் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

நாளை பங்குச்சந்தைகள் வழக்கம்போல் செயல்படும். அதேசமயம், தீபாவளி பலிபிரதிபதையை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகூர்த்த வர்த்தகம் பாரம்பரியமாக மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், பங்குகளை வாங்குவதால் லாபம் உறுதி கிடையாது. முதலீட்டாளர்கள் தங்களது ஆய்வு மற்றும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.