தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: திருப்பூரில் நள்ளிரவு, அதிகாலையில் நிறுத்தம்!

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவனந்தபுரம் வடக்கு – ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, வண்டி எண் 06073 திருவனந்தபுரம் வடக்கு – நிஜாமுதீன் சிறப்பு ரயில் நவம்பர் 2, 9, 16 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் அன்றைய தினம் இரவு 11.50 மணிக்கு திருப்பூர் வந்தடைந்து, 11.55 மணிக்குப் புறப்படும்.

மறுமார்க்கத்தில், வண்டி எண் 06074 நிஜாமுதீன் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) நிஜாமுதீனில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு திருப்பூர் வந்தடைந்து, 6.15 மணிக்குப் புறப்படும்.

இந்த சிறப்பு ரயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன. பண்டிகைக் காலத்தில் பயணிகள் முன்பதிவு விவரங்களைச் சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.