தீபாவளி ரயில் முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 6) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது.

இதனால் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்தன.