திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், நலவாரியம் செயல்படுத்தப்படும் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் போன்ற பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.
புதிய அரசு அமைந்து 100 நாட்களைக் கடந்தும் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களைையொட்டி திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து கூட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.