தவெக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் - 5 முனைப் போட்டியால் மதுராந்தகம், தாராபுரத்தில் அனல் பறக்கும் களம்!

 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தவெக மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேலும், திமுக சார்பில் ஐ.பரந்தாமனும் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமாவும், திமுக சார்பில் எஸ்.சுகன்யாவும் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.

இதற்கிடையே, இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளன.

இந்த இடைத்தேர்தலில் முக்கியக் கட்சிகளான திமுக மற்றும் தவெகவுடன், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியும் (நாதக) களமிறங்குவதால், தொகுதிகளில் பலமுனைப் போட்டி ஏற்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.